0 Comments

தமிழா! தமிழா! – ஐரோப்பாவின் தலைசிறந்த திறமைகளுக்கான அடையாளம்!!

 

தமிழா! தமிழா! – 2021

ஐரோப்பாவின் தலைசிறந்த திறமைகளுக்கான அடையாளம்!!

தமிழா தமிழா – இணைய நேரலை நிகழ்ச்சி ஏப்ரல் 18 (ஞாயிறு) மற்றும் ஏப்ரல் 24 (சனிக்கிழமை)

ஜெர்மனி: கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை காக்க நடைபெற்று வரும் நிதி திரட்டும் பணியின் மற்றுமொரு முயற்சியாய்   ஐரோப்பா தமிழர்கள் சார்பில் ‘தமிழா தமிழா’ என்ற தலைப்பில் பல்வேறு கலை சார்ந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகள், உலகெங்கிலும் உள்ள தமிழர்களை ஒன்று சேர்க்கும் வண்ணமாகவும், அவர்களின் தனித் திறமைகளை அடையாளம் காணும் வண்ணமாகவும், மிக முக்கியமாக, கொலோன் தமிழ் துறையின் பால் கவனம் ஈர்க்கும் வகையிலும் அமையும் என நம்புகிறோம். இப்போட்டிகள் அனைத்தும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. இணையம் வாயிலாக இப்போட்டிகள் நடைபெறவுள்ளதால், உலகெங்கிலும் இருந்து மக்கள் கலந்து கொள்ள இயலும். போட்டிகள் பற்றிய முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

  • குழந்தைகளுக்கான பாடல், ஆடல், கதை/செய்யுள் ஒப்புவித்தல், மாறுவேட போட்டிகள் (நடுவர்: திரைப்பட பாடகி திருமதி. மால்குடி சுபா)

பெரியவர்களுக்கான போட்டிகள் பின்வருமாறு, 

  • குறும்பட போட்டி (நடுவர்: குறும்பட இயக்குனர்/திரைப்பட இணை இயக்குனர் திரு. கோவர்த்தன் பத்மநாதன்)
  • தமிழ் கவிதை மற்றும் குறுங்கதை போட்டி (நடுவர்: கவிஞர்/திரைப்பட பாடலாசிரியர் திரு. யுகபாரதி)
  • நிழற்பட போட்டி (நடுவர்: பிரபல நிழற்படக் கலைஞர் திரு கார்த்திக் ஸ்ரீனிவாசன்)
  • பாட்டுப் போட்டி (நடுவர்: சூப்பர் சிங்கர் புகழ் திரு சக்தி அமரன்)
  • நடன போட்டி (நடுவர்: உங்களில் யார் அடுத்த பிரபுதேவா 2 வெற்றியாளர் திரு கார்த்திக் மற்றும் திரைப்பட நடன ஆசிரியர்/நடிகர் திரு நந்தா)
  • சமையல் போட்டி (நடுவர்: பிரபல சமையற்கலை வல்லுநர் திரு தாமு)

இவற்றை தவிர சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்குபெறும் சதுரங்க போட்டியும் நடைபெற உள்ளது (நடுவர்: செஸ் கிராண்ட் மாஸ்டர் திரு பிரியதர்ஷன் கண்ணப்பன்)    . 

இப்போட்டிகளின் நுழைவு கட்டணமாக குறைந்தபட்ச தொகையை கொலோன் தமிழ் துறையை காக்கும் பொருட்டு அன்பளிப்பாக கோருகிறோம். போட்டிகளில் பங்கேற்பவர்கள் குறைந்தபட்ச தொகை மட்டுமின்றி, தாராளமாக நன்கொடை அளிக்குமாறு  தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் பங்கேற்று, தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று, அதனோடு  கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையை காத்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தடம் பதிப்போம், தமிழ் காப்போம் ! வருக வருக, வெல்க வெல்க !!

Download PDF (Tamil)