0 Comments

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை – 2023 வரை நீட்டிப்பு

ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை – 2023 வரை நீட்டிப்பு

கடந்த 20 பிப்ரவரி 2021 அன்று ஜெர்மன் நாட்டில் மூடப்படும் நிலையில் இருந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை காக்க ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் மூலமாக “கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மீட்போம்” கூட்டுநிதி திரட்டும் முயற்சி தொடங்கப்பட்டது. உலக தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பின் மூலமாக 25936.76 € (சுமார் ரூபாய் 23 இலட்சம்) நிதி  திரட்டப்பட்டது. இத்துடன் தமிழக அரசும் 60 ஆண்டு காலமாக சீர்மையாக இயங்கிவரும்  இத்தமிழ்த்துறை தொடர 1.25 கோடி ரூபாய் நிதி வழங்கியது.  இத்தொகையை கொண்டு,  தற்காலிகமாக தமிழ்த்துறையை 2022 வரை தொடர முடியும். 

 

இம்முயற்சிகளின்  பலனாகவும்,  உலக தமிழர்களின் ஆதரவினை கருத்தில் கொண்டும் கொலோன் பல்கலைக்கழகம் தாமாகவே முன்வந்து தமிழ்த்துறையை ஓர் ஆண்டு நீட்டித்து, 2023 வரை தொடர்ந்து இயங்க வழிவகை செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நிறைவுபெற்று, வகுப்புகள் தொடங்கியுள்ளது. 

இம்முயற்சியில் பங்களித்து பேராதரவு நல்கிய தமிழக அரசிற்கும், அனைத்து கொடையாளர்களுக்கும், சமூக அமைப்புகளுக்கும், தமிழ் சங்கங்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும், ஊடகங்களுக்கும் ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றிகளை உரித்தாக்குகிறோம். 

மூடவிருந்த பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, ஐரோப்பா தமிழர்களின் உடனடி இலக்கில் வெற்றி அடைந்துள்ளோம். அடுத்தகட்டமாக, தமிழ்த் துறையை நிரந்தரமாக நீட்டிக்க செய்யும் தொலைநோக்கு திட்டத்திற்கான ஐரோப்பிய தமிழர்கள் கூட்டமைப்பின் முயற்சிகள் தொடரும்.

பார்வைக்காக : https://indologie.phil-fak.uni-koeln.de/news

செய்தி தொடர்பாளர்,
ஐரோப்பா தமிழர்கள் கூட்டமைப்பு.

Download (Tamil)

Leave your comment

20 + 12 =